சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வடகரையைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் தன் மனைவி சரஸ்வதி உடன்திருப்புவனத்திலிருந்து சரக்கு வாகனத்தில் பொருட்களை ஏற்றி கொண்டு தேவகோட்டைக்கு சென்றுள்ளார்.
வேன் மோதி விபத்து - 3 பேர் படுகாயம் - படுகாயம்
சிவகங்கை: கரும்பாவூர் அருகே பனை மரத்தில் வேன் மோதியதில் மூவர் படுகாயம் அடைந்தனர்.
Sivaganga
அப்போது கரும்பாவூர் என்ற இடத்தின் அருகே அவர்கள் சென்றுகொண்டிருக்கும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், சுப்பிரமணி (70), அவரது மனைவி சரஸ்வதி (64) மற்றும் மடப்புரத்தைச் சேர்ந்த டிரைவர் ஆதீஸ்வரன் (23) ஆகிய மூவரும் பலத்த காயமடைந்துள்ளனர். சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.