சிவகங்கை :நாட்டரசன்கோட்டை கிராமத்தில் நாட்டரசன்கோட்டை ஒன்றிய திமுக சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
இதில் சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த காளைகள் மட்டுமில்லாமல் மதுரை, புதுக்கோட்டை, தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 12 காளைகளும், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
காளை ஒன்றிற்கு 25 நிமிடங்கள் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ஒரு சுற்றிற்கு 9 வீரர்கள் களம்கண்டனர். சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் சிலர் அடக்கி வென்றும், 25 நிமிடங்களாகப் போராடி காளையை வீரர்கள் அடக்கமுடியாமல் திணறியபோது காளைகள் வெற்றிபெற்ற நிகழ்வுகளும் அரங்கேறின.
இதில் வெற்றிபெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் 7 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் கோப்பையும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஏராளமான மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் கண்டுகளித்தனர்.
இதையும் படிங்க : பழனியில் குவிந்த பக்தர்கள் - கடுமையாகப் பாதிக்கப்பட்ட போக்குவரத்து!