தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திட்டமிட்டபடி நகர்புற உள்ளாட்சி தேர்தல் - அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் - மருதுபாண்டியர்கள்

நகர்புற உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்டபடி நடத்தப்படும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

கேஆர்.பெரியகருப்பன்
கேஆர்.பெரியகருப்பன்

By

Published : Oct 24, 2021, 6:24 PM IST

சிவகங்கை:விடுதலைப் போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் 220 ஆவது குரு பூஜை விழா இன்று (அக்.24) அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர்களின் நினைவு மண்டபத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் மருது சகோதரர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், " மருதுபாண்டியர்களின் படத்தை சட்டப்பேரவையில் இடம்பெற வேண்டுமென்ற வாரிசுகளின் கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

கேஆர்.பெரியகருப்பன்

மருதுபாண்டியர்களின் உருவச்சிலை பிரதான நகரங்களில் விதிமுறைகளுக்கு உட்பட்டு நிறுவப்படும். நகர்ப்புற தலைவர் தேர்தல், நேரடியாகவும் நடக்கலாம், மறைமுகமாகவும் நடக்கலாம். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். திட்டமிட்டபடி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாரிசு அரசியலை கடுமையாக எதிர்த்த வைகோ நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? துரை வைகோவுடன் நேர்காணல்

ABOUT THE AUTHOR

...view details