சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பூலாம்பட்டி என்ற கிராமத்தில் இருந்து சின்னையா என்பவரது மகன்கள் சின்னகருப்பு, பாகன்பூசாரி, ஆகிய இருவரும் சிங்கம்புணரியில் இருந்து சிவகங்கை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, மதகுபட்டி அருகே ஒக்கூர் பகுதியில் இருந்து வந்த ஸ்கார்பியோ கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
சாலை விபத்தில் சகோதரர்கள் இருவர் பலி - car
சிவகங்கை: இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில் சகோதரர்கள் இருவரும் உயிரிழந்தனர்.
இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற சகோதரர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாக மற்ற ஒருவரை மீட்டு சிவகங்கை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரும் உயிரிழந்தார்.
இந்நிலையில், இருவரது உடலையும் உடற்கூறாய்வுக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து, மதகுபட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.