சிவகங்கைஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி.கே சிங் தலைமையில், மாவட்டத்தில் மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங், ஆய்வுக் கூட்டத்தில் திட்டப் பணிகள் குறித்து பல்வேறு கருத்துகள் ஆலோசனை செய்யப்பட்டது எனவும், தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.