சிவகங்கை மாவட்டம் ஸ்ரீநிவாசா நகர் பகுதியை சேர்ந்தவர் கர்ணன் என்பவர் வேலை தேடி கொண்டிருந்த நிலையில் திருப்புவனம் தாலுகாவிற்குட்பட்ட பிரம்மனூர் கிராமத்தை சேர்ந்த முனீஸ்வரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்ட் வேலைக்கு பார்ப்பாதகவும் தற்போது போலாந்து நாட்டில் நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய கர்ணன் ரூ. 3 லட்சத்தை முனீஸ்வரனிடம் கொடுத்துள்ளர். ஆனால் முனீஸ்வரன் கூறியபடி அவர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது சரியான பதில் ஏதும் கூறாமல் வாங்கிய பணத்தை திரும்ப தராமலும் இழுத்தடித்து வந்துள்ளார்.
வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்த புகாரின் பேரில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி
இதுகுறித்து கர்ணன் சிவகங்கை எஸ்.பி அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் முனீஸ்வரனை கைது செய்து சிறையிலடைத்தனர்.