தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எச்.ராஜா ஒரு கலவரக்காரர்! - அமமுக தேர்போகி பாண்டி

சிவகங்கை: ஒரு வேட்பாளரை பார்க்கவும் முடியாது பேசவும் முடியாது அவர் எதுவுமே செய்யமாட்டார். இன்னொரு வேட்பாளர் வாயைத் திறந்தாலே கலவரம் ஏற்பட்டுவிடும் என்று சக போட்டி வேட்பாளர்கள் குறித்து சிவகங்கை மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி விமர்சனம் செய்துள்ளார்.

அமமுக நாடாளுமன்ற வேட்பாளர் தேர்போகி பாண்டி

By

Published : Apr 16, 2019, 7:20 PM IST

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் தேர்போகி பாண்டி இன்று சிவகங்கை நகரில் தனது இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அரண்மனை வாசல் முன்பு அவர் பேசியதாவது;

‘இதுவரை நடைபெற்ற மக்களவைத் தேர்தல் சாதாரணமாக நடந்து முடிந்தது. மிகப்பெரிய ஜாம்பவான்கள் என்று சொல்லி பெரிய மனிதர்கள் போர்வையில் வந்து மக்களின் வாக்குகளை பெற்று 35 ஆண்டு காலம் இப்பகுதியை நாசம் செய்துவிட்டனர். 35 ஆண்டுகள் போதாது என்று தற்போது அவரது மகனுக்கு பதவி வேண்டுமாம்! பெரிய குடும்பத்தை சேர்ந்த ப.சிதம்பரம், மரியாதைக்காவது எதாவது நல்லது செய்வார் என்று மக்கள் நம்பி வாக்களித்தனர். ஆனால் அவர் எதுவுமே செய்யவில்லை.

சிவகங்கை மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி

ப.சிதம்பரம் தொகுதிக்கு நல்லது செய்யவில்லை என்றாலும் மரியாதை இருந்தது. ஆனால் கார்த்தி சிதம்பரத்தால் அவர் மரியாதையை இழந்துவிட்டார். ஜமீன் குடும்பமாக இருந்த ப.சிதம்பரம் ஜாமீன் தேடும் குடும்பமாக ஆகிவிட்டதாக ஊரில் பேசிக்கொள்கின்றனர். யாருமே அணுகமுடியாத மனிதர்தான் ப.சிதம்பரம். அப்படியிருக்கையில் அவரது மகனை எப்படி பார்க்க முடியும். ஆலங்குடி பகுதியில் நெடுவாசலை சுற்றியுள்ள 20 கிராமங்களிலும் கஜா புயல் பாதித்த 20 கிராமங்களிலும் உள்ளே செல்லமுடியாத நிலையில்தான் இரண்டு தேசிய கட்சிகள் இருக்கின்றன.

ஜமீன் குடும்பமாக இருந்த ப சிதம்பரம் ஜாமீன் தேடும் குடும்பமாக ஆகிவிட்டதாக ஊரில் பேசிக்கொள்கின்றனர். அமமுக வேட்பாளர் பாண்டி

நோட்டாவுடன் போட்டி போடுபவர்கள் இங்கே ஒரு மத பிரச்னையோ, ஒரு சாதி பிரச்னையோ உருவாக்கினால், நமக்கு லாபம் வருமா என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும் மதவெறி பிடித்தவர் எச்.ராஜா. ஒரு வேட்பாளரை பார்க்கவும் முடியாது, பேசவும் முடியாது எதுவுமே செய்யமாட்டார். இன்னொரு வேட்பாளர் வாயை திறந்தாலே கலவரம் வந்துவிடும்’ என்றார்.

ABOUT THE AUTHOR

...view details