சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அடுத்த பெரியகண்ணூர் கிராமத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளியாக இருந்துவருபவர் திருவராஜ். இவர் நடந்த முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வினை எழுதினார். அந்தத் தேர்வில் தேர்ச்சிப்பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்தார்.
இந்நிலையில் இவர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து குரூப் 4 தேர்வுமுறைகேடு பூதகரமாக எழுந்து முறைகேட்டில் ஈடுபட்ட பல்வேறு நபர்கள் கைது-செய்யப்பட்டுவருகின்றனர். சிபிசிஐடி காவல் துறையினர் குரூப்-2 தேர்விலும் முறைகேடு சம்பந்தமாக எழுந்த குற்றச்சாட்டு அறிந்ததையடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
திருவராஜின் உறவினரான சித்தாண்டி என்பவர் காவல் துறையில் பணியாற்றிவருகின்றார். இதனைப் பயன்படுத்திக்கொண்டு டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் பணிபுரிந்துவரும் சிலருடன் நட்பினை ஏற்படுத்திக்கொண்டு தேர்வுமுறைகேட்டில் ஈடுபட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து சிபிசிஐடி காவல் துறையினர் சித்தாண்டியின் சகோதரர் வேல்முருகன் என்பவர் 2018ஆம் ஆண்டு குரூப்-2 தேர்வெழுதி மாநில அளவில் மூன்றாம் இடம்பிடித்து தற்போது காரைக்குடி முத்துப்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்துவருகிறார். அங்கு சென்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு கைதுசெய்து சென்னை அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க :தள்ளாத வயதிலும் சமூக சேவையில் ஈடுபடும் முதியவர்