தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கீழடி அகழாய்வு பணியை பார்வையிட்ட தொல்லியல் துறை ஆணையர்! - தமிழ்நாடு தொல்லியல் துறை

சிவகங்கை: கீழடி, கொந்தகையில் நடைபெற்று வரும் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஆணையர் உதயச்சந்திரன் இன்று (செப்டம்பர் 10) பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர்.

கீழடி அகழாய்வு பணியை பார்வையிட்ட தொல்லியல் துறையின் ஆணையர்!
கீழடி அகழாய்வு பணியை பார்வையிட்ட தொல்லியல் துறையின் ஆணையர்!

By

Published : Sep 10, 2020, 6:50 PM IST

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுக்காவில் அமைந்துள்ள கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆறாம் கட்டமாக நடைபெறும் இந்த அகழாய்வில் கீழடியில் சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகள் அனைத்தும் செப்டம்பர் மாதம் இறுதியில் முடிவடைவதை அடுத்து, தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஆணையர் உதயச்சந்திரன் இன்று (செப். 10) பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். அவருடன் புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜன், ஆறாம் கட்டடப் பணி ஆலோசகர் சேரன், தமிழ்நாடு தொல்லியல் துறையின் இணை இயக்குநர் சிவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கீழடி அகழாய்வு பணியை பார்வையிட்ட தொல்லியல் துறையின் ஆணையர்!

மேலும், அகழாய்வு கள பொறுப்பாளர்கள் மேற்கண்ட நான்கு இடங்களிலும் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர். அதனையடுத்து, கீழடியில் நடைபெறும் கள அருங்காட்சியகத்திற்கான கட்டுமான பணிகளையும் உதயச்சந்திரன் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.

இதையும் படிங்க...அரியலூர் மாணவன் தற்கொலை: ரூ. 7 லட்சம் நிவாரணம், ஒருவருக்கு அரசு வேலை!

ABOUT THE AUTHOR

...view details