சென்னையில் கடந்த மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்துக் கொண்டன.
'ஜான்பாண்டியனை ஒருமையில் பேசுவதா..?' - கொதித்த தமமுக கட்சியினர்! - எரிப்பு
சிவகங்கை: தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியனை ஒருமையில் பேசியதாக, திமுக தலைவர் ஸ்டாலினின் உருவப்படத்தை எரித்து அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அங்கீகாரம் இல்லாத தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் போன்ற சிறு கட்சிகளை ஏன் அழைத்தீர்கள் என்ற கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஜான்பாண்டியனை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
ஸ்டாலினை கண்டித்து சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் ராஜேஷ் பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலினின் உருவப்படத்தை எரித்து, அவருக்கு எதிராக அக்கட்சியினர் கோஷமிட்டனர்.