சிவகங்கை மாவட்டத்தில் நேற்று காலை முதல் சூரியன் சுட்டெரித்து வந்தநிலையில், மதிய நேரத்தில் திடீரென வானம் கருமேகத்தால் சூழப்பட்டது. இதனால் சிவகங்கை, காளையார்கோவில், கொள்ளங்குடி, நாட்டரசன்கோட்டை, கூத்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூரைகாற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. சுமார் அரைமணி நேரம் நீடித்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
23 ஆடுகளைக் கொன்ற இடி! - goats died
சிவகங்கை: கூத்தாண்டம் அருகே இடி தாக்கியதில் 23 ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிவகங்கை
இந்நிலையில், கூத்தாண்டம் பகுதியில் மேய்த்துக் கொண்டிருந்த ஆண்டார் என்பவர் மீது இடி தாக்கியுள்ளது. இதில், மயங்கி விழுந்த ஆண்டாரை மீட்ட அருகிலிருந்தோர் அவரை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமத்தித்தனர். மேலும், இடி தாக்கிய சம்பவத்தில் ஆண்டாரின் 23 ஆடுகள் பலியாகின.
இது குறித்து ஆண்டாரின் மகன் கூறும்போது, ‘விவசாய குடும்பமான எங்களுகளுக்கு இந்த ஆடுகள் மட்டுமே ஒரே வாழ்வாதாரமாக இருந்தது. எனவே அரசு எங்களுக்கு உதவ வேண்டும்’ என கோரிக்கைவிடுத்தார்.