கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக ஐந்தாம் கட்ட ஆய்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் இன்று கீழடி அகழாய்வு களத்தைப் பார்வையிட சிசீசூட் மற்றும் ஜோ எனும் இரு அமெரிக்கப் பயணிகள் வந்தனர்.
கீழடி நாகரிகம் குறித்து அவர்கள் பேசுகையில், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்த மக்கள் குறித்து தங்களுக்கு பெரும் வியப்பு ஏற்படுகிறது. அம்மக்களின் நாகரிகம் மிகச்சிறப்பாக இருந்துள்ளது.
இந்திய அரசின் ஒத்துழைப்போடு நடைபெறுகின்ற இந்த ஆய்வுகள் பெருமைக்குரியது. தமிழ்நாட்டு மக்களின் உணவு பழக்க வழக்கம் தங்களைப் பெரிதும் ஈர்த்துள்ளது எனக் கூறியுள்ளனர்.
கீழடியின் பழமையான நாகரீகம் வியப்பைத்தருகிறது நாள்தோறும் கீழடி அகழாய்வு களத்தை பார்வையிடவரும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், பொதுமக்களுக்கு சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'எந்த அரசு பொறுப்பேற்றாலும் கீழடி ஆய்வைத் தொடரவேண்டும்' - ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா!