தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய அரசு விருது, தமிழ்நாடு முதல்வரின் செயல்பாட்டிற்கு கிடைத்த நற்சான்று - அமைச்சர் பெரியகருப்பன் - ஸ்டாலினின் செயல்பாட்டிற்கு கிடைத்த நற்சான்று

காளையார்கோவிலில் நடைபெற்ற ஐ.ஏ.எஸ் பயிற்சி மைய திறப்பு விழாவில் கலந்துகொண்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், மத்திய அரசின் விருது என்பது தமிழ்நாடு முதல்வரின் செயல்பாட்டிற்கு கிடைத்த நற்சான்று என கூறினார்.

மத்திய அரசு விருது தமிழ்நாடு முதல்வரின் செயல்பாட்டிற்கு கிடைத்த நற்சான்று - அமைச்சர் பெரியகருப்பன்
மத்திய அரசு விருது தமிழ்நாடு முதல்வரின் செயல்பாட்டிற்கு கிடைத்த நற்சான்று - அமைச்சர் பெரியகருப்பன்

By

Published : Oct 5, 2022, 8:01 PM IST

சிவகங்கை: காளையார்கோவிலில் இந்திய மருத்துவ கழகம் சார்பில், கல்வி நிறுவனங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வானது மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் சட்ட பேரவை சபாநாயகர் அப்பாவு ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர் தனியார் ஐ.ஏ.எஸ் பயிற்சி மைய திறப்பு விழாவில் கலந்துகொண்டு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனிடம் மத்திய அரசு விருது வழங்கியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தேசிய அளவில் இந்த விருதை மாண்புமிகு குடியரசு தலைவரிடம் பெற்றதற்கு காரணம் தமிழக அரசின் செயல்பாடு தான். மேலும் இந்த விருது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் செயல்பாட்டிற்கு கிடைத்த நற்சான்று என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.

மத்திய அரசு விருது தமிழ்நாடு முதல்வரின் செயல்பாட்டிற்கு கிடைத்த நற்சான்று - அமைச்சர் பெரியகருப்பன்

இதையும் படிங்க:சர்வதேச முதியோர் தினம்: மூத்த வாக்காளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

ABOUT THE AUTHOR

...view details