சிவகங்கை: திருப்புவனத்தில் பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்தும், பல ஊர்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவர். இந்நிலையில், நேற்று பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய பணத்தை எண்ணுவதற்காக உண்டியல் திறக்கப்பட்டு, எண்ணும் பணி நடைபெற்றது.
அப்போது கோயில் செயல் அலுவலர் விஸ்வமூர்த்தி என்பவர், பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்த தங்க நகைகளில் 10 சவரன் தங்க நகையை திருடி, தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்த காட்சிகள் சிசிடிவியில் பதிவானது. இதனை கோயில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கவனித்த கோயில் நிர்வாகம், காவல் நிலையத்தில் செயல் அலுவலர் மீது திருட்டு தொடர்பாக புகார் அளித்துள்ளது.