சிவகங்கை:மறமங்கலத்தைச் சேர்ந்தவர் வீரகாளி. இவர் தனது மகளை கோயம்புத்தூரில் உள்ள கல்லூரிக்கு மதுரையிலிருந்து பேருந்தில் ஏற்றி அனுப்பிவைத்துவிட்டு சொந்த ஊர் நோக்கி மனைவி கவிதாவுடன் காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, சிவகங்கை - மதுரை நெடுஞ்சாலையில் சித்தாலங்குடி என்ற இடத்தில் மதுரை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வீரகாளி, கவிதா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அரசுப் பேருந்தில் சென்ற 15-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.