தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 8, 2022, 7:25 PM IST

ETV Bharat / state

'வீரம் விளைந்த மண் சிவகங்கை; இங்கு நடைபெறும் விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்'

திருப்பத்தூர் அருகே நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், வீரம் விளைந்த மண் சிவகங்கை என்றும்; இங்கு நடைபெறும் விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.

வீரம் விளைந்த மண் சிவகங்கை! இங்கு நடைபெறும் விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் முதல்வர்!
வீரம் விளைந்த மண் சிவகங்கை! இங்கு நடைபெறும் விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் முதல்வர்!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரை அடுத்து காரையூர் சோளம்பட்டி விலக்கில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசும்போது, 'சிங்கம்புணரி கோட்டைவேங்கைப்பட்டி கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. சாதியை ஒழித்ததோடு, தமிழையும் வளர்த்ததன் மூலம் திராவிடம் வளர்கிறது.

கடந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக இல்லை. அதனால் தான் சமத்துவபுரம் திறக்கப்படவில்லை. குடிநீர் வசதி, மின் வசதி, கழிப்பறை வசதி, வீட்டுக்கு 2 தென்னை மரங்கள், அண்ணா விளையாட்டுத்திடல் உள்ளிட்ட வசதிகள் சமத்துவபுரத்தில் வழங்கப்பட்டுள்ளன.

சிவகங்கையில் கிராமங்களில் சீல்டு கால்வாய் பணிநடைபெறும். இதனால் கீழப்பூங்குடி, சாலூர், மேலச்சாலூர் உள்ளிட்ட 5 கிராமங்கள் பயன்பெறும் வகையில் கர்ப்பிணிகளுக்கு 12 ஆயிரம் படுக்கை கொண்ட கூடுதல் கட்டடம் சிவகங்கையில் கட்டப்படும்.

சாலையோரம் மக்கள் கை அசைத்து கரகோஷம் செய்கிறார்கள். எனக்கும், ஆட்சிக்கும் நற்சான்று இது. மக்களுக்கு நேர்மையான ஆட்சி வழங்குகிறோம் என்பதை இது காட்டுகிறது. தற்போது ஆட்சியில் அதிகளவு மக்களை சந்திக்கிறேன்.

வெங்கையா நாயுடு, திமுக ஆட்சியைப்பெருமை செய்யும் அளவிற்குப் பாராட்டினார். கலைஞர் போல எந்த கொம்பனாலும் செயல்பட முடியாது. ஆனாலும், அவர் போல செயல்படுவதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து சமூக பணிகளை செய்வேன். இதே வேகத்தில் பணி செய்வேன். அன்பும், அரவணைப்பும் என்னை ஊக்கப்படுத்துகிறது. கீழடியின் மூலம் பழங்கால வரலாற்றைத் தொடர்ந்து வெளிக்கொண்டு வருகிறோம். மேலும் வேலுநாச்சியார் பெயரில் பெண்காவலர் பயிற்சி மையம் அமைக்க பரிசீலனை செய்யப்படும்’ என்றும் தெரிவித்தார்.

வீரம் விளைந்த மண் சிவகங்கை! இங்கு நடைபெறும் விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் முதல்வர்!

இதையும் படிங்க:புதுக்கோட்டையில் அரசு விழா: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

ABOUT THE AUTHOR

...view details