சிவகங்கை:75ஆவது சுதந்திர தினத்தை வரவேற்கும் விதமாக ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். இதேபோன்று, சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுதலை போராட்ட வீரர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்.
அதன் ஒரு நிழ்வாக, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் பாஜக சார்பில் நேற்று (ஆக. 13) நடைபெற்ற நடை பயணத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை, தேசிய கொடியை கையில் ஏந்தியபடி அண்ணா சிலை அருகிலிருந்து தாலுகா சாலை வழியாக, பேரணி நடத்தினார். பின்னர், தாலுகா அலுவலகத்தின் அருகில் அமைந்துள்ள வீரமங்கை வேலூநாச்சியருக்கு உருதுணையாக இருந்து செயல்பட்ட வீரர்களான மருது சகோதரர்களின் மணிமண்டபத்திற்கு சென்றார்.