தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"நீ தம்பியை நல்லபடியா பார்த்துக் கொள்"- உருக்கமான ஆடியோ பதிவிட்டு தாய் தற்கொலை! - Mother commits suicide after posting audio

சிவகங்கை அருகே தனது மூத்த மகனுக்கு வாட்ஸ் அப்பில் ஆடியோ ஒன்றை அனுப்பிவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

"நீ தம்பியை நல்லபடியா பார்த்துக் கொள்"- உருக்கமான ஆடியோ பதிவிட்டு தாய் தற்கொலை!
"நீ தம்பியை நல்லபடியா பார்த்துக் கொள்"- உருக்கமான ஆடியோ பதிவிட்டு தாய் தற்கொலை!

By

Published : Dec 29, 2022, 10:51 PM IST

"நீ தம்பியை நல்லபடியா பார்த்துக் கொள்"- உருக்கமான ஆடியோ பதிவிட்டு தாய் தற்கொலை!

சிவகங்கைஅருகே கருதுபட்டியைச் சேர்ந்தவர்கள் பாண்டியன் - மகேஸ்வரி தம்பதியர். இவர்களுக்கு 16 வயது, 9 வயதில் இரு மகன்கள் உள்ளனர். பாண்டியன் சென்னையில் தொழில் செய்து வந்த நிலையில் மகன்களும் சென்னையில் படித்து வந்துள்ளனர்.

சில ஆண்டுக்கு முன் பாண்டியன் மட்டும் மினரல் வாட்டர் கம்பெனி நடத்துவதற்காகச் சொந்த ஊரான கருதுபட்டிக்கு வந்துள்ளார். மகன்களின் படிப்பிற்காக மகேஸ்வரி சென்னையிலேயே தங்கி இருந்து வந்த நிலையில் கணவன் மீது சந்தேகமடைந்த மனைவி அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது இளைய மகனுடன் கருதுபட்டிக்கு மகேஸ்வரி வந்துள்ளார். நேற்று கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்த மகேஸ்வரி தனது மூத்த மகனுக்கு வாட்ஸ் அப்பில் ஆடியோ அனுப்பியுள்ளார்.

அதில் நான் சாகப் போகிறேன், நீ தம்பியை நல்லபடியாகப் பார்த்துக் கொள். என்னை மன்னித்து விடு. உங்க அப்பாவை நம்பாதே. என் சாவுக்கு அவர் தான் காரணம் என அழுகையுடன் கூறிவிட்டு வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து சிவகங்கை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:புனேவில் 15 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details