தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒற்றைக்காலில் நின்று சிலம்பம் சுற்றி அசத்தும் மாணவர்கள்

சிவகங்கையில் ஒற்றைக்காலில் நின்றபடி ஒரு மணி நேரத்திற்கு, 500 மாணவர்கள் சிலம்பம் சுற்றி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

ஒற்றைக்காலில் நின்று சிலம்பம் சுற்றும் மாணவர்கள்
ஒற்றைக்காலில் நின்று சிலம்பம் சுற்றும் மாணவர்கள்

By

Published : Sep 4, 2022, 10:18 PM IST

சிவகங்கைமாவட்ட விளையாட்டு அரங்கில் 500 சிறுவர், சிறுமியர் இணைந்து ஒரே நேரத்தில் ஒற்றை காலில் ஒரு மணிநேரம் நின்று சிலம்பம் சுற்றும் உலக சாதனை முயற்சிக்கும் சிலம்பம் தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு பற்றி தெரிந்து கொள்ள நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

முன்னதாக இந்த நிகழ்வை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சிறுவர் சிறுமியர் ஒற்றைக்காலில் நின்று பல்வேறு முறைகளில் சிலம்பம் சுற்றி காண்பவர்களை வியப்பில் ஆழ்த்தினர்.

ஒற்றைக்காலில் நின்று சிலம்பம் சுற்றும் மாணவர்கள்

பின்னார் மல்லர் கம்பம் ஏறுதல், கயிறு ஏறுதல் போன்ற சாகச நிகழ்ச்சிகளை குழந்தைகள் முதல் பள்ளி சிறுவர் ,சிறுமியர் செய்து காட்டினார். இந்த உலக சாதனை முயற்சியில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாது மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சிறுவர், சிறுமியர்களும் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:கும்பகோணத்தில் ருசிகரமான பாரம்பரிய உணவு திருவிழா

ABOUT THE AUTHOR

...view details