சிவகங்கை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னைகளை தீர்ப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு கனிம நிறுவன மேலாண்மை இயக்குநருமான மகேசன் காசிராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் பங்கேற்றார்.
சிவகங்கை மாவட்டத்தில் தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை - கண்காணிப்பு அலுவலர் - டிநீர் வழங்க நடவடிக்கை
சிவகங்கை: மாவட்டத்தில் தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேசன் காசிராஜன் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த மகேசன் காசிராஜன், சிவகங்கை மாவட்டத்தில் மூன்று நகராட்சிகள், 12 பேரூராட்சிகள், 12 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 445 கிராம ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் தங்குதடையின்றி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மொத்தமாக உள்ள 2ஆயிரத்து 723 குக்கிராமங்கள் உள்ளன. இதில் ஆயிரத்து 730 குக்கிராமங்களுக்கு தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மீதமுள்ள 993 குக்கிராமங்களுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
மேலும் இதில் 217 குக்கிராமங்கள் கோடைகாலத்தில் பாதிப்பிற்கு உள்ளாகும் என்பதை முன்னரே கண்டறியப்பட்டு ரூ.12 கோடி மதிப்பீட்டில் திட்டபணிகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் நீர்நிலை ஆதாரங்களை சீர்செய்ய கூடுதல் நிதி கோரப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்திலுள்ள அனைத்து நீர்நிலை ஆதாரங்களும் சீர்செய்யும் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.