சிவகங்கை : சிவகங்கையில் தனியார் திருமண மஹாலில் கவிஞர் இலக்கியா நடராஜனின் 'பெயர் தெரியாத பறவையென்றும்' கவிதைகள் மற்றும் 'மயானக்கரை ஜனனங்கள்' சிறுகதைத்தொகுப்பு ஆகிய இரு நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், கவிஞர் வைரமுத்து, மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், நக்கீரன் கோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களின் ஆன்மிகம் மற்றும் அரசியல் குறித்த கேள்விக்குப் பதிலளித்த வைரமுத்து, 'அரசியல் வழியே ஆன்மிகமும், ஆன்மிகத்தின் வழியே அரசியலும் எல்லா நூற்றாண்டுகளிலும் எல்லா தேசிய இனங்களிலும் எல்லா நாடுகளிலும் நிகழ்ந்து வந்திருக்கின்றன.
'அரசியலின் குரல்வளையை ஆன்மிகம் பிடிப்பது தகாது...!' - கவிஞர் வைரமுத்து பல நேரங்களில் அரசியலையே ஆன்மிகம் தான் தீர்மானித்தது. இந்த வரலாற்றையும் நீங்கள் படித்திருப்பீர்கள். ஆனால் அரசியலின் குரல்வளையை ஆன்மிகம் பிடிப்பதும் ஆன்மிகத்தின் குரல் வளையை அரசியல் பிடிப்பதும் தகாது என்பது என் எண்ணம். இதை சம்பந்தப்பட்ட தலைவர்கள் உணர்ந்துகொண்டால் நாட்டுக்கு நலம்' என்றார்.
இதையும் படிங்க: தொடர் பெட்ரோல் குண்டு வெடிப்புகளுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்...