சிவகங்கை:தமிழ் மாதங்கள் 12இல் புரட்டாசிக்கு தனிச் சிறப்பு உண்டு. இந்த மாதம், பெருமாளுக்கு மட்டுமின்றி, அம்பாளுக்கும் உகந்ததாக திகழ்கிறது.
குறிப்பாக புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், சகல சௌபாக்கியமும், நலன்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.
மேலும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வதும், அவரது கோயிலுக்கு சென்று தரிசனம் பெருவதும் மிகச் சிறப்பாகும். இதையடுத்து புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு விரதமிருந்தால் சனி தோஷம் நீங்கும் என்பர்.
பெருமாளுக்கு சிறப்பு பூஜை சனிக்கிழமை சிறப்புகள்
இந்தப் புரட்டாசி சனிக்கிழமைகளில் திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை வணங்குவது பெரும் பாக்கியம். இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று பெருமாளை வணங்கலாம். இல்லையென்றால் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் வழிபடலாம்.
இந்நிலையில் புரட்டசி கடைசி சனிக்கிழமை மிக விமர்சியாக நடைபெறும். அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அந்த வகையில் நேற்று (அக்டோபர் 16) புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இந்தக் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிவகங்கையிலுள்ள சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: துலாமில் சஞ்சரிக்கும் சூரியனால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்?