தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராணுவ வீரரின் மனைவி, தாய் கொலை; நகைகள் கொள்ளை! - sivagangai district news

சிவகங்கை: வீட்டில் தனியாக இருந்த ராணுவ வீரரின் மனைவி, தாய் ஆகியோரைக் கொலைசெய்த அடையாளம் தெரியாத நபர்கள், நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

mureder
mureder

By

Published : Jul 14, 2020, 1:13 PM IST

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ளது முக்கூரணி கிராமம். இங்கு முன்னாள் ராணுவ வீரர் சந்தியாகு என்பவர் வசித்துவருகிறார். இவரின் ஒரு மகன் காரைக்குடியில் வசிக்கிறார். மற்றொரு மகன் ஸ்டீபன், தற்போது லடாக் எல்லையில் ராணுவ வீரராகப் பணியாற்றிவருகிறார்.

முக்கூரணியில் ஸ்டீபன் வீட்டில் மனைவி சிநேகா (30), அவரது தாயார் ராஜகுமாரி (60), தந்தை சந்தியாகு, ஸ்டீபனின் 7 வயது குழந்தை ஆகியோர் வசித்துவருகின்றனர். ஸ்டீபனின் தந்தை சந்தியாகு தோட்ட வேலையின் பொருட்டு நேற்று இரவு தோட்டத்திலேயே தங்கிவிட்டார். இந்நிலையில், இன்று அதிகாலை ஸ்டீபனின் வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், தூங்கிக்கொண்டிருந்த சிநேகா, ராஜகுமாரியை கம்பியால் தாக்கி படுகொலை செய்துவிட்டு, வீட்டிலிருந்த பணம், நகை ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

ஸ்டீபனின் குழந்தை கதறி அழுத சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாகக் காவல் துறைக்குத் தகவலளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், வீட்டை முழுமையாகச் சோதனை செய்துவருகின்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கொலை, கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் நகை, பணத்திற்காக இந்தப் படுகொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் கரோனாவால் மேலும் ஒரு காவலர் உயிரிழப்
பு

ABOUT THE AUTHOR

...view details