சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நீதிமன்றத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு அரசு மதுபான கடைகளை நடத்துவதை எதிர்த்து வழக்கறிஞரும் சமூக சேவருமான நந்தினி துண்டு பிரசுரம் விநியோகம் செய்தார். அதை தடுத்த காவல்துறையினரை எதிர்த்து பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் 27ஆம் தேதி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
'போராடுவது சரிதான்... போராட்ட முறைதான் தவறு..!' - நந்தினிக்கு நீதிபதி அறிவுரை - சமூக ஆர்வலர் நந்தினி சொந்த பிணையில் விடுவிப்பு
சிவகங்கை:"சட்டத்திற்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும். போராடுவது சரிதான்... போராட்ட முறை தவறானது" என்றும் நீதிபதி அறிவுரைக் கூறி சமூக ஆர்வலர் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்த் இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதில் நந்தினி, அவரது தந்தை ஆனந்தன் நேரில் ஆஜராயினர். அப்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பு இல்லாத கேள்விகளை கேட்கக் கூடாது என்று நீதிபதி சாமுண்டிஸ்வரி பிரபா கூறியதை நந்தினி கேட்காமல் மதுபானம் உணவு பொருளா.. மருத்து பொருளா..என்றும், போதை பொருள் என்றால் அதை விற்கும் அரசு குற்றவாளி அல்லவா.. இதைக் கேட்ட என் மீது வழக்கு போடப்பட்டுள்ளது என்று நந்தினியும் அவரது தந்தை ஆனந்தன் ஆகிய இருவரும் வழக்குக்கு சம்மந்தம் இல்லாத கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்டதால் இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டு இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இவ்வழக்கின் மேல்விசாரணைக்கு நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் இருவரும் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா, நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் இருவரையும் சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார். "சட்டத்திற்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும். போராடுவது சரிதான். போராட்ட முறை தவறானது" என்றும் நந்தினிக்கு நீதிபதி அறிவுரை வழங்கினார்.