சிவகங்கை: டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் டான், அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இந்தப் படத்திற்கான பூஜை ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்த நிலையில், இந்த படத்திற்கான படபிடிப்பு இன்று(பிப்.10) காரைக்குடியில் தொடங்கியது. காரைக்குடி மற்றும் பாண்டிச்சேரியில் ஒரே கட்டமாக படபிடிப்பு நடைபெற உள்ளது. இதில் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘SK 20’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது.