திருப்பத்தூர் அருகே கண்டவராயன்பட்டியை சேர்ந்தவர் கார்த்தி. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி கூட்டாளிகளுடன் கார்த்தி தனது பிறந்தநாளைப் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டிய வீடியோ வலைத்தளங்களில் வரலாகப் பரவியது.
பட்டாக்கத்தியால் கேக் வெட்டி சர்ச்சையில் சிக்கியுள்ள ரவுடி! - sivagangai
சிவகங்கை: தனது பிறந்தநாளுக்கு கூட்டாளிகளுடன் சேர்ந்து பட்டாக் கத்தியுடன் கேக் வெட்டி கொண்டாடும் ரவுடியை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
Sivagangai Rowdy
பட்டா கத்தியால் கேக் வெட்டிய பதிவுகள் குறித்து உளவுத்துறையினரும், காவல்துறை உயர் அலுவலர்களுக்குத் தெரியவந்தது.
இதுகுறித்து, திருப்பத்தூர் காவல் துறையினர் கார்த்தி உள்ளிட்ட மூன்று பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். கார்த்தியுடன் இருந்தவர்கள் யார் யார் என்றும், பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய வீடியோவை யார் சமூக வலைத்தளங்களில் பரப்பியது போன்ற தகவல்கள் குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.