தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

125 கிடாக்களுடன் 10 கி.மீ நடந்து சென்ற மக்கள்.. எதற்காக தெரியுமா? - kuladeiva valipadu

சிவகங்கையில் குலதெய்வ வழிபாட்டிற்காக 125 கிடாக்களுடன் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கிராம மக்கள் வழிபாடு நடத்தினர்.

குலத்தெய்வ வழிபாட்டுக்காக 125 கிடாக்களுடன் 10 கிமீ நடந்து செல்லும் கிராம மக்கள்
குலத்தெய்வ வழிபாட்டுக்காக 125 கிடாக்களுடன் 10 கிமீ நடந்து செல்லும் கிராம மக்கள்

By

Published : Jun 9, 2023, 2:29 PM IST

சிவகங்கையில் குலதெய்வ வழிபாட்டிற்காக 125 கிடாக்களுடன் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கிராம மக்கள் வழிபாடு நடத்தினர்

சிவகங்கை:சிவகங்கை அருகே உள்ள பெருமாள்பட்டி மற்றும் இலுப்பக்குடி கிராமங்களைச் சார்ந்த 65 குடும்பங்கள் ஒன்று சேர்ந்து நரியனேந்தலில் உள்ள அவர்களது குலதெய்வ கோயிலான முத்தையா கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை குலதெய்வ வழிபாடு நடத்துகின்றனர்.

அந்த வகையில், கடந்த 5 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த இந்த குலதெய்வ வழிபாடு இன்று தொடங்க உள்ளதால் ஊர் மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். அது மட்டுமல்லாமல், அந்த ஊர் மக்கள் 125 கிடாக்கள் உடன் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு நடந்து சென்று உள்ளனர்.

இன்று தொடங்க இருக்கும் இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். பெரியவர்களைத் தொடரந்து பின்புறம் அவர்களது குழந்தைகள் மற்றும் பொருட்கள் உடன் 65 சரக்கு வாகனங்களும் அணிவகுத்துச் சென்றன. இதனையடுத்து, இன்று இரவு கோயிலை அடையும் கிராம மக்கள், நாளை (ஜூன் 9) காலை கோழிகளை பலி கொடுத்து தங்களது வழிபாட்டைத் தொடங்குகின்றனர்.

பின்னர், வருகிற 10ஆம் தேதி கிடா வெட்டி வழிபாடு நடத்துகின்றனர். தொடர்ந்து 11ஆம் தேதி கிடா வெட்டி படையல் இட்டு அவர்களது வேண்டுதலை முடிக்கின்றனர். இதனை முடித்துக் கொண்டு வழிபாடு அனைத்தும் முடிந்த பின்னர், மாலை 65 சரக்கு வாகனங்களில் ஊருக்கு திரும்ப உள்ளனர்.

இதையும் படிங்க:இணை இயக்குநராக சியாமளா இருந்ததே தெரியாது - கோபி நயினார் விளக்கம்

மேலும், இது குறித்து குலதெய்வ வழிபாட்டிற்காக செல்லும் பக்தர்களில் ஒருவரான ராமசாமியிடம் இந்த வழிபாடை பற்றி கேட்டபோது, ”கடந்த காலங்களில் குழந்தைகள் மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்ல மாட்டு வண்டிகளை பயன்படுத்தினோம். தற்போது சரக்கு வாகனங்களை பயன்படுத்துகிறோம்.

கரோனாவால் 5 ஆண்டுகளுக்கு பின்னர் சாமி கும்பிடுகிறோம். மூன்று நாட்கள் அங்கேயே தங்கி இருப்போம்” என தெரிவித்தார். அதேநேரம், ஊர் மக்கள் ஒற்றுமையாக சேர்ந்து செல்வது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், 125 கிடாக்கள் உடன் செல்லும் ஊர் மக்களின் வீடியோ சமூக வலைதளங்களில் பக்தி உடன் வைரலாகி வருகிறது. மேலும், இந்த வழிபாட்டில் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த பல கிராமத்தினரும் சாமி தரிசனம் செய்கின்றனர்.

இதையும் படிங்க:சிசிடிவி பராமரிக்க ரூ.3.5 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details