சிவகங்கைமாவட்ட நகராட்சி ஆணையாளராக பாலசுப்பிரமணியன் என்பவர் கடந்த ஒரு வருடமாக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் நேற்று (மே13) நடந்த நகராட்சி நிர்வாக நடவடிக்கைகள் குறித்து, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா நடத்திய காணொலி காட்சியில் பங்கேற்றார்.
அப்போது இயக்குனர் அரசு திட்டங்கள் குறித்து சில தகவல்களை சிவகங்கை நகராட்சி ஆணையரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிவகங்கை நகராட்சி ஆணையாளர் முறையான தகவல்கள் கொடுக்கவில்லை என்று கூறி அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.