சிவகங்கை :ஒக்கூரை அடுத்துள்ள ஓ.அண்ணநகர் கிராமத்தை சேர்ந்த விவசாயி முத்துராமன். இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்துவருகிறார். இந்நிலையில் கடந்த 10 நாள்களுக்கு முன்னதாக காற்றுடன் கூடிய கனமழை பெய்த்தது.
இதில், இவரது விவசாய நிலத்தில் கிணற்று மோட்டாருக்காக ஊன்றப்பட்ட இரு மின்கம்பங்களில் ஒரு மின்கம்பம் முறிந்து விழுந்துள்ளது. இது குறித்து மதகுபட்டி மின்சார வாரிய சார்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததுடன், அந்த மின் கம்பங்களை மாற்றி தரக்கோரியும் புகார் மனு அளித்துள்ளார்.
லஞ்சம் கேட்கும் மின்சார வாரிய ஊழியர்
இதனை தொடர்ந்து அப்பகுதியில் மின் இணைப்பை உடனடியாக துண்டித்த ஊழியர்கள், கடந்த பத்து நாள்களாக மின் கம்பங்களை மாற்றித் தராமல் அலைக்கழித்துள்ளனர். இதுகுறித்து கேட்ட விவசாயியிடம், மின்கம்பத்தை மாற்ற அலுவலர்களுக்கு நான்கு ஆயிரம் ரூபாய் உட்பட 10 ஆயிரம் ரூபாய் செலவாகும் என தெரிவித்துள்ளார்.
இந்த உரையாடல் இவரது செல்போனில் பதிவாகியுள்ளது. ஏற்கனவே கடனில் தத்தளித்துவரும் விவசாயி முத்துராமன், தான் வட்டிக்கு வாங்கியே அந்த பணத்தை ஏற்பாடு செய்ததாக தெரிவித்தும், ஈவு இரக்கமின்றி அந்த மின்சார ஊழியர் பணம் கேட்கும் ஆடியோவும் அவரது செல்போனில் பதிவாகியுள்ளது. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி அந்த விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க : ’மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கான தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை’