தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விதிமுறைகளை மீறும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

அரசின் விதிமுறைகளை மீறும் தனியார் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி எச்சரித்துள்ளார்.

sivagangai district collector press meet
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

By

Published : Jan 9, 2022, 11:12 AM IST

சிவகங்கை: மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசரகால கட்டுப்பாட்டு மையம், இலவச உளவியல் ஆலோசனை மையத்தினை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆய்வு மேற்கொண்டு தற்போது மாவட்டத்தில் உள்ள நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி, ”முழு ஊரடங்கு காலத்தில் திருமணம் நடத்தவிருப்பவர்கள் 100 பேருக்கு மிகாமல் கலந்து கொண்டு எந்த ஒரு அனுமதியுமின்றி திருமணத்தை நடத்திக்கொள்ளலாம்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி

மாவட்டத்தில் இதுவரை 103 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1342 ஆக்சிஜன் படுக்கைகளும், 193 அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளும், 1400 சாதாரண படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. 794 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளன.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. 80 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 59 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

42 ஆயிரம் பள்ளி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது 71,290 கோவிஷீல்டு தடுப்பூசியும், 9,970 கோவாக்சின் தடுப்பூசியும் கையிருப்பில் உள்ளது‌.

அரசு விதிமுறைகளை மீறி செயல்படும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யாருக்கேனும் கரோனா, ஒமைக்ரான் போன்ற அறிகுறி இருந்தால் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை எண் 18004259456 என்கிற எண்ணில் தொடர்பு கொண்டு ஆலோசனைகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:புதுச்சேரியில் புதிதாக 280 பேருக்கு கரோனா உறுதி

ABOUT THE AUTHOR

...view details