சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் உள்ள அருள்மிகு சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி ஆலயம் மிகவும் புகழ்பெற்றதாகும். இந்த ஆலயத்தில், ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும் விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.
ஆனால் இன்று(ஏப்.27) அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் இல்லாமல் எளிமையான முறையில் பூஜைகள் மட்டும் நடைபெற்றது. இவ்விழாவில் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து பால் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
கட்டுப்பாடுகள் காரணமாக ஆலயத்தின் அருகில் பெரிய தொட்டி வைக்கப்பட்டது. அதில் பக்தர்கள் பால் ஊற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் நேரடியாக சுவாமியை தரிசித்து பால் அபிஷேகம் செய்யமுடியாமல் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.