சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மாங்குடி கிராமம் உள்ளது. அங்குள்ள அய்யனார் கோயில் அருகில் உள்ள கருவேலங்காட்டில் ரவுடி கும்பல் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் காவல் துறையினர் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது அங்குள்ள கண்மாய் பகுதியில் இருந்த ஏழு நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் அப்பகுதியில் மண் அள்ளி வந்ததும், பொதுமக்களை மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது.