தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

504 கிடாய் உடன் ஊர் மெச்ச சீர்.. மாவட்ட சேர்மன் மகளுக்கு வழங்கிய கிராம மக்கள்! - sivaganga

சிவகங்கை மாவட்ட சேர்மன் மகளின் வரவேற்பு நிகழ்வில், 504 கிடாய்களை எஸ்.புதூர் ஒன்றிய கிராம மக்கள் சீராக வழங்கி உள்ளனர்.

மாவட்ட சேர்மன் மகளுக்கு 504 கிடாய் சீர் செய்த கிராம மக்கள்!
மாவட்ட சேர்மன் மகளுக்கு 504 கிடாய் சீர் செய்த கிராம மக்கள்!

By

Published : Feb 27, 2023, 10:07 AM IST

சிவகங்கை மாவட்ட சேர்மன் மகளின் வரவேற்பு நிகழ்வில், 504 கிடாய்களை எஸ்.புதூர் ஒன்றிய கிராம மக்கள் சீராக வழங்கினர்

சிவகங்கை:சிவகங்கை மாவட்ட சேர்மன் பொன்.மணி பாஸ்கரன் என்பவர், எஸ்.புதூர் ஒன்றியம் பொன்னடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் அதிமுகவில் சிவகங்கை மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளராகவும் உள்ளார். இந்த நிலையில் மாவட்ட சேர்மனின் மகள் ஹரிப்பிரியா - ஜெயக்குமார் தம்பதிக்குக் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி சென்னையில் வைத்து திருமணம் நடைபெற்றது.

இதனையடுத்து தம்பதியின் திருமண வரவேற்பு விழா குன்னத்தூர் அருகே உள்ள ஓவிஎம் கார்டனில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட எஸ்.புதூர் ஒன்றிய கிராம மக்கள், பொன்.மணி பாஸ்கரன் இல்ல திருமண வரவேற்பு விழாவை அசத்தும் விதமாகச் சீர் செய்யும் விழா நடத்த முடிவு செய்தனர்.

இதன்படி மாவட்ட சேர்மனின் மகள் ஹரிப்பிரியா - ஜெயக்குமார் தம்பதிக்கு 504 ஆட்டுக்கிடாய், ஆளுயுர குத்துவிளக்கு, தாமிர பானை, பட்டுச் சேலை, காய்கறி, பழங்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை, கிராம மக்கள் குன்னத்தூர் கண்மாய் சாலையிலிருந்து தப்புத்தாளம் முழங்கப் பட்டாசுகள் வெடித்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டு வந்தனர். இவ்வாறு சீர் கொண்டு வந்த மக்கள் அனைவரையும் பொன்.மணி பாஸ்கரன் குடும்பத்தார்கள் நன்றி கூறி வரவேற்றனர்.

இந்த திருமண வரவேற்பில் எஸ்.புதூர் ஒன்றிய மக்கள் சார்பில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்களால் எடுக்கப்பட்ட இந்த சீர்வரிசை ஊர்வலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மேலும் கடந்த கரோனா நேரத்தில், இந்த பகுதியில் உள்ள மக்களின் வீடுகளுக்குச் சென்று அரிசி, பருப்பு மற்றும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மாவட்ட சேர்மன் பொன்.மணி பாஸ்கரன் தொய்வின்றி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:புவிசார் குறியீடு: சர்வதேச கவனம் பெறும் ராமநாதபுரம் 'முண்டு வத்தல்'

ABOUT THE AUTHOR

...view details