தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவகங்கையில் ஆட்சியரின் பெயரை பயன்படுத்தி ரூ.3 லட்சம் மோசடி..!! - போலி செல்போன் கணக்கு மூலம் பணம் மோசடி

சிவகங்கையில் ஆட்சியரின் பெயரில் போலி கணக்கு உருவாக்கி அவரின் நேர்முக உதவியாளரிடம் ரூ.3 லட்சம் பெற்று மோசடி நடைபெற்றுள்ள நிலையில் சைபர் கிரைம் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகங்கையில் ஆட்சியரின் பெயரை பயன்படுத்தி ரூ.3 லட்சம் மோசடி..!
சிவகங்கையில் ஆட்சியரின் பெயரை பயன்படுத்தி ரூ.3 லட்சம் மோசடி..!

By

Published : Jul 1, 2022, 6:04 PM IST

சிவகங்கை:மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியின் விவசாயத்துறை நேரடி உதவியாளராக பணிபுரிந்து வருபவர் சர்மிளா. இவரது மொபைல் போனில் உள்ள வாட்சப் எண்ணிற்கு ஆட்சியர் மதுசூதன் ரெட்டி புகைப்படத்துடன் கூடிய போலி கணக்கில் இருந்து லிங்க் மூலம் 10 ஆயிரம் ரூபாய் அனுப்ப கோரி குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதனை உண்மை என நம்பிய உதவியாளர் சர்மிளா 10 ஆயிரம் ரூபாயை அந்த லிங்க் மூலம் அனுப்பியுள்ளார்.இதேபோல் அடிக்கடி குறுஞ்செய்தி வரவே இவரும் 30 முறை 10 ஆயிரம் ரூபாய் என 3 லட்ச ரூபாய் வரை அனுப்பிய நிலையில், சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அவர் இது குறித்து ஆட்சியரின் அலுவலகத்தில் விசாரித்ததில் அது போலியான கணக்கு என்பது தெரியவரவே உடனடியாக சிவகங்கை எஸ்.பி அலுவலகத்தில் செயல்பட்டுவரும் சைபர் கிரைம் போலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

உடனடியாக வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் விசாரனையை துவங்கிய நிலையில் அந்த போலி செல்போன் கணக்கு பிஹார் மாநிலத்தில் இருந்து செயல்பட்டு வருவது தெரியவரவே முதல் கட்ட நடவடிக்கைகளை துவங்கியுள்ளனர். ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் ஆட்சியரின் பெயரிலேயே போலி செல்போன் கணக்கு மூலம் பணம் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கையில் ஆட்சியரின் பெயரை பயன்படுத்தி ரூ.3 லட்சம் மோசடி..!

இதையும் படிங்க:சர்கார் பட துணை நடிகர் 82 லட்சம் மோசடி செய்ததாக காவல் ஆணையரிடம் புகார்!!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details