மரம் வளர்ப்பு, தலைக் கவசம் அணிதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்தல், மழை நீர் சேகரிப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில்காரைக்குடியில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணி, காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பேரணி, காவேரி தனியார் மருத்துவமனையில் நிறைவுப் பெற்றது.
மழைநீர் சேமிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி! - ரஜினி மக்கள் மன்றம்
சிவகங்கை: மழை நீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு, தலைக்கவசம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி காரைக்குடியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
rally
ஹெல்மெட் அணிதலின் முக்கியத்துவம், மரம் வளர்த்தல், மழைநீர் சேகரித்தல் போன்றவைகளின் அவசியத்தை குறிக்கும் வாக்கியங்கள் எழுதிய பாதாகைகளை ஏந்தியப்படிச் சென்றனர். இப்பேரணியில் ரஜினி ரசிகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.