சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளம் கிராமத்தில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக அழகிய சவுந்திர நாயகி அம்மனுக்கு கிராமத்து பெண்கள் அசைவ உணவுகளை சமைத்து படையல் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். இந்த வகையில், இங்குள்ள 200 க்கும் மேற்பட்ட பெண்கள், தங்கள் வீடுகளில் இருந்து விநாயகர், மனித பொம்மை, ஜல்லிக்கட்டு காளை, குடை உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் கொழுக்கட்டைகளை எடுத்து வந்தனர்.
மேலும் கறி, மீன், கருவாடு, முட்டை போன்ற அசைவ உணவுகளையும் சமைத்து பாரம்பரியம் மாறாமல் ஓலைப் பெட்டியில் வைத்து கொண்டு வந்தனர். தொடர்ந்து, இந்த ஓலைப்பெட்டியோடு விளக்குகளை கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர்.