சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. கீழடி மட்டுமன்றி அதன் அருகே உள்ள கொந்தகை அகரம் ஆகிய பகுதிகளில் தற்போது அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நாள்தோறும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் வருகை தருகின்றனர்.
கரோனா பீதி: கீழடியில் பார்வையாளர்களுக்குத் தடை! - Prohibit visitors in keezhadi
மதுரை: தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக கீழடியில் நடைபெற்றுவரும் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகளைக் காண வரும் பார்வையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Prohibit visitors in keezhadi for corona impact
இதனிடையே கரோனா வைரஸின் தாக்கம் நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற காரணத்தால், தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்கங்கள், பூங்காக்கள் என பொதுமக்கள் பெருமளவு கூடும் இடங்களை மூட அரசு உத்தரவிட்டது. இதேபோல, கீழடியிலும் அதிகமான மக்கள் கூடுவதால் அகழாய்வுப் பணி நடைபெறும் பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என தொல்லியல் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க:முதன்முறையாக மூடப்பட்ட பழமைவாய்ந்த உதகை அரசு தாவரவியல் பூங்கா!