தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவகங்கை புனித அந்தோணியார் ஆலயத்தில் பொங்கல் விழா கோலாகலம்! - சிவகங்கை புனித அந்தோனியார் ஆலயத்தில் பொங்கல் விழா

சிவகங்கை மாவட்டம் கண்டுப்பட்டி புனித அந்தோணியார் ஆலயத்தில் மத நல்லினக்கத்தை ஏற்படுத்தும் விதமாக சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டியதில் ஒருவர் உயிரிழந்தார்.

சிவகங்கை புனித அந்தோனியார் ஆலயத்தில் பொங்கல் விழா கோலாகலம்
சிவகங்கை புனித அந்தோனியார் ஆலயத்தில் பொங்கல் விழா கோலாகலம்

By

Published : Jan 19, 2022, 7:33 AM IST

Updated : Jan 19, 2022, 6:14 PM IST

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கண்டுப்பட்டியில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதையொட்டி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று(ஜன.18) காலை மருத்துவ பரிசோதனைக்கு பின்பு 145 காளைகள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது.

காலை 11 மணி அளவில் போட்டி தொடங்கியது. இதை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். இதில் பார்வையாளராக வந்திருந்த பாகனேரியை சேர்ந்த மலைச்சாமி என்பவரை காளை முட்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முன்னதாக புனித அந்தோணியார் ஆலயத்தில் மத நல்லினக்கத்தை ஏற்படுத்தும் விதமாக பொங்கல் வைத்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர். ஆண்டுதோறும் தை 4ஆம் தேதி நடைபெறும் இந்த பொங்கல் விழா சிறப்பு பெற்றது.

சிவகங்கை புனித அந்தோணியார் ஆலயத்தில் பொங்கல் விழா கோலாகலம்

இன்று நடந்த விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்ததுடன் கரும்பாலை தொட்டி ஏந்தியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். ஆலயத்திற்கு வந்திருந்த பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: தைப்பூசத்தை முன்னிட்டு எருகாட்டும் விழா நடத்திய சொரையூர் கிராமத்தினர்

Last Updated : Jan 19, 2022, 6:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details