சிவகங்கை: மறவமங்கலம் அடுத்துள்ள அதியதிரும்பல் கிராமத்தைச் சேர்ந்த சின்னையா மகன் சண்முகம். இவர் கோயம்புத்தூரிலுள்ள மதுபான விடுதியில் வேலை செய்து வருகிறார்.
தற்சமயம் இவர் சொந்தக் கிராமத்திற்கு திரும்பிய நிலையில் இன்று (பிப். 04) காலை புரசடைஉடைப்பில் செயல்பட்டுவரும் திறந்தவெளி சிறைச்சாலை அருகே அடையாளம் தெரியாதவர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் காளையார்கோவில் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.