நாம் தமிழர் கட்சி சிவகங்கை தொகுதி இணைச் செயலாளர் வேல்முருகன், சுற்றுச்சூழல் பாசறை அமைப்பைச் சேர்ந்த முருகன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:
சிவகங்கை: வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றுக! - Petition to remove occupancy of canal
சிவகங்கை: வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
"சிவகங்கை மாவட்டத்தின் பல இடங்களில் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால் போதிய நீர்வரத்து இன்றி நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. எனவே மாவட்ட நிர்வாகம் வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் வீடுகள் தோறும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் சிவகங்கை மாவட்டத்தில் நெகிழி ஒழிப்புத் திட்டம் முழுமையாக இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. எனவே நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய நடவடிக்க எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.