தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வருவாய் அலுவலர்களை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் - அடித்து விரட்டிய காவல் துறை

சிவகங்கையில் தனியார் மருத்துவமனைக்குச் சொந்தமான நிலத்தை அளவீடு செய்ய வந்த வருவாய் துறையினரை கண்டித்து அக்கிராம மக்கள் தீகுளிக்க முயற்சித்தனர்.

By

Published : Oct 17, 2021, 12:21 PM IST

ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம மக்கள்
ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம மக்கள்

சிவகங்கை: மானாமதுரை அருகேயுள்ள கல்குறிச்சி கிராமத்திற்கு அருகே தனியார் மருத்துவமனைக்குச் சொந்தமான சுமார் 40 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக தனியார் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் கல்குறிச்சி கிராமத்திலிருக்கும் இடையே வழக்கு நடந்து வருகிறது.

இந்த வழக்கில் தனியார் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அந்த இடத்தை அளவீடு செய்து கொடுக்கக் கோரி தனியார் மருத்துவமனை நிர்வாகம் வருவாய் துறையினருக்கு மனு கொடுத்திருந்தனர்.
இந்நிலையில் கல்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் அந்த இடத்தில் தங்களுக்கும் சொந்தம் இருப்பதாக கூறி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை உயர் நீதிமன்ற கிளை அந்த இடத்தை தனியார் மருத்துவமனைக்கு அளவீடு செய்து தரக்கோரி வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வருவாய் துறையினர் அந்த இடத்திற்கு அளவீடு செய்ய வந்தனர்.

ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம மக்கள்

அப்போது கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சாமி ஆடியும், ஒரு பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். பின்னர், அவர்களை கைது செய்த காவல் துறையினர், வேனில் ஏற்றிச் சென்றனர்.

இதையும் படிங்க:ரூ.1 கோடி மதிப்புள்ள நிலங்களைப் பொது ஊருணிக்குத் தானமாக கொடுத்த குடும்பங்கள்

ABOUT THE AUTHOR

...view details