சிவகங்கை:தேவகோட்டை அருகே ரூபாய் 7000 லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற உதவி செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தேவகோட்டை அருகே கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வருபவர், திருமாறன். இவரிடம் தேராப்பூர் ஊராட்சி மன்றத்தலைவர் சுப்பிரமணி என்பவர், தேராப்பூரில் புதிய சாலை அமைக்கும் பணிக்கான திட்ட மதிப்பீட்டு ஆவணம் கேட்டு விண்ணப்பித்துள்ளார். திட்ட ஆவணம் வழங்க உதவி செயற்பொறியாளர் திருமாறன் ஊராட்சி மன்றத்தலைவரிடம் 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுப்பிரமணியன் விருதுநகர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.