சிவகங்கை: காரைக்குடி தொகுதியில் உள்ள கண்டனூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது வாக்கினை பதிவு செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "நான் யாருக்கு வாக்களித்திருப்பேன் என்பதை சொல்ல வேண்டிய அவசிமில்லை. எங்களுடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப்பெரிய வெற்றியை அடையும் என்பதில் எந்த விதமான ஐயமும் கிடையாது.
'மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றியை ஈட்டும்' - ப. சிதம்பரம் நம்பிக்கை - ப. சிதம்பரம் வாக்குப் பதிவு
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டும் என்று கண்டனூரில் வாக்கினை பதிவு செய்த முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார்.
ப. சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பு
காரைக்குடி தொகுதியும் அந்த வகையிலேயே வெற்றியை தரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தமிழ்நாட்டு மக்களிடம், ஆட்சி மாற்றம் தேவை என்பதற்கான ஆர்வம் நன்றாகவே தெரிகிறது. அந்த ஆர்வமும் தேவையும் இந்தத் தேர்தலில் பிரதிபலித்து மே மாதம் 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும்போது மெய்ப்பிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் விவரம்