சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே கீழக்கோட்டையில் புரவி எடுப்பு விழா நடந்தது. இதையடுத்து அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. வெகு விமரிசையாக நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்குபெற்றன. இந்தக் காளைகள் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டன. இந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்தனர். அப்போது மாடு பிடிக்க சென்ற அழகமாநகரி கிராமத்தை சேர்ந்த இளைஞர் பாலகுரு (27) மாடு முட்டியதில் படுகாயமடைந்தார்.
மஞ்சுவிரட்டில் மாடு முட்டி ஒருவர் பலி! - manjuvirattu
சிவகங்கை: மேலக்கோட்டை அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டியதில் இளைஞர் பலியானார்.
இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் காயமடைந்த பாலகுருவை செம்பனூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, பாதி வழியிலேயே உயிரிழந்தார். இவரது உடல் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், 20க்கும் மேற்பட்டோர் மஞ்சு விரட்டில் காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மதகுபட்டி காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மஞ்சுவிரட்டில் மாடு பிடி வீரர் மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.