சிவகங்கை: சிங்கம்புணரியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் 69ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மகளிருக்கான மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. சிங்கம்புணரி, திருப்பத்தூர், மதுரை, ஒட்டன்சத்திரம், கோபிசெட்டிபாளையம், உசிலம்பட்டி, சென்னை என தமிழ்நாடு முழுவதும் இருந்து 13 அணிகள் பங்கேற்றன.
போட்டியினை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். இரண்டு நாள்களாக மின்னொளியில் நடைபெற்ற இப்போட்டியினை, சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் உற்சாகமாக கண்டுகளித்தனர்.