தேவக்கோட்டையில் உள்ள வானவில் ஷாப்பிங்க் சென்டர், மெட் ப்ளஸ் மருந்தகம், டீக்கடை, செக்காலையில் உள்ள அரிசிக்கடை ஆகியவற்றில் ஷட்டர் கதவு உடைக்கப்பட்டு பணம் மட்டும் திருடப்பட்டிருந்தது.தேவக்கோட்டை , காரைக்குடி ஆகிய இரு ஊர்களில் அடுத்தடுத்த நாட்களில் இச்சம்பவம் நடைப்பெற்றிருந்தாலும், சம்பவம் ஒரே மாதிரியாக நடந்ததால் எஸ்.ஐ. மீனாட்சி சுந்தரம் தலைமையிலான தேவக்கோட்டைக் குற்றப்பிரிவுப் காவல்துறையினர் CCTV காட்சியை வைத்து தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொண்டனர் .
வடமாநில கொள்ளையர்கள் 4 பேர் கைது! - Norths Four of them arrested for robbery
சிவகங்கை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த வடமாநில கொள்ளையர்கள் நான்கு பேரை CCTV காட்சியை வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
CCTV
CCTV காட்சியில் இருந்தவர்கள் வெளி மாநிலத்தினர் என்பதால், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் யார் தங்கி உள்ளனர் என தேவகோட்டை, காரைக்குடி பகுதிகளில் போலீசார் சோதனை செய்தனர்.