தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவகங்கையில் என்ஐஏ: மாவோயிஸ்ட் சகோதரர் வீட்டில் ரெய்டு - என்ஐஏ சோதனை

மாவோயிஸ்ட் சகோதரர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.

சிவகங்கையில் என்ஐஏ
சிவகங்கையில் என்ஐஏ

By

Published : Oct 12, 2021, 12:25 PM IST

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அண்ணாமலை நகரில் கேரளாவில் கைதுசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த நபரின் சகோதரர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.

அண்மையில் கேரளாவில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர் கைதுசெய்யப்பட்டார். அவரது பூர்விகம் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொன்னையாபுரம் பகுதியாகும். 2011ஆம் ஆண்டு அப்பகுதியில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து மாவோயிஸ்ட் காளிதாஸும் அவரது சகோதரரான சிங்காரமும் சொந்த ஊரைவிட்டு வெளியேறி காளிதாஸ் கேரளாவிற்கும் சிங்காரம் சிவகங்கை அண்ணாமலை நகர் பகுதிக்கும் குடிபெயர்ந்துள்ளனர்.

கடந்த ஒரு வார காலத்திற்கு முன்னர் கேரளாவில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்களால் மாவோயிஸ்ட் காளிதாஸ் கைதுசெய்யப்பட்ட நிலையில் இன்று சிங்காரம் வீட்டில் கொச்சினைச் சேர்ந்த ஆய்வாளர் உன்னிகிருஷ்ணன் தலைமையிலான தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு: கோவையில் என்ஐஏ அதிரடி சோதனை

ABOUT THE AUTHOR

...view details