திண்டுக்கல்:பாடத்தான்பட்டியை சேர்ந்தவர் திவ்யநாதன். இவர் நேற்று (அக்.16) நாகவயலியிலிருந்து கூத்தலூர் செல்லும் சாலையில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியில் உள்ள சருக்கு பாலம் அருகே பச்சிளம் பெண் குழந்தை கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் அக்குழந்தையை மீட்டு எஸ்.ஆர் பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். அப்போதுதான் அந்த குழந்தை பிறந்து சுமார் மூன்று மணி நேரததிற்குள்தான் இருக்கும் என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து கல்லல் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்த ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் குழந்தையின் உடம்பில் சிறு காயங்கள் காணப்பட்டதால் உடனடியாக குழந்தையை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.