சிவகங்கையில் காவல் கண்காணிப்பாளர் ரோகித்நாதன், இ-பீட் சிஸ்டம் செயலி அறிமுக கூட்டத்தை தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் ரோந்து பணி செல்லும் காவலர்கள் அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள க்யூ ஆர் கோர்டை ஸ்கேன் செய்வதன் மூலம், பணிக்கு வந்தது உறுதி செய்யப்படும்.
ரோந்து செல்லும் காவலர்களுக்கான இ - பீட் செயலி அறிமுகம்! - காவல் கண்காணிப்பாளர்
சிவகங்கை: ரோந்து செல்லும் காவலர்களுக்கான இ-பீட் செயலியை காவல் கண்காணிப்பாளர் ரோகித்நாதன் தொடங்கி வைத்தார்.
new app
மேலும் குற்ற நடவடிக்கைகள் அதிகம் உள்ள இடங்களில் க்யூ ஆர் கோடு நிறுவப்படவுள்ளது. வெளியூர் செல்பவர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தால், க்யூ ஆர் கோடின் மூலம் அப்பகுதி கண்காணிக்கப்படும். இதற்கென தனி கட்டுப்பாட்டு அறை ஒதுக்கப்பட்டு நடவடிக்கைகள் அனைத்தையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வை செய்வார்.