சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் நிரம்பி விட்டன. புதிதாக வரும் நோயாளிகளுக்குத் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாத சூழல் உறுவாகியுள்ளது.
கரோனா பாதிப்பு: சிவகங்கையில் 9 ஆயிரத்தை நெருங்கும் கரோனா எண்ணிக்கை! - கரோனா பாதிப்பு
சிவகங்கை: கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 8ஆயிரத்து840 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஞாயிறன்று கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8ஆயிரத்து644 என்ற எண்ணிக்கையில் இருந்த நிலையில் நேற்று புதிதாக 196 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், பாதிப்பு எண்ணிக்கை 8ஆயிரத்து840 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் எண்ணிக்கையால் மாவட்ட நிர்வாகம், சுகாதரத் துறையினர் கவலையடைந்துள்ளனர். பொதுமக்கள் அரசின் ஊரடங்கு விதிகளை மதித்து தகுந்த இடைவெளியை கடைபிடித்து, முடிந்தவரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.